மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறோம் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தாங்கள் அமோக வெற்றிபெற்று தமிழக முதலமைச்சராகப்பொறுப்பேற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து நல்லாட்சி வழங்கிவருவதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை, தங்களின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலனில் தாங்கள் கொண்டிருக்கும் மிகுந்த அக்கறையையும், மனிதநேயத்தையும்பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த 3.12.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலகமாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், வருவாய்த்துறையின் 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அவர்கள் தற்போது பெற்றுவரும் மாத ஓய்வூதியத்தொகையான ரூபாய் 1000 த்திலிருந்து, 1500 ரூபாயாக உயர்த்தி, வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிளை சங்கங்களை கொண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி செயல் வீரர்களை கொண்ட தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வுசங்கம் (உதவிக்கரம்) சார்பில், மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் தாங்கள் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவும் அறிவித்துச் செயல்படுத்தி கொண்டுவரும் கிழ்கண்ட நல்ல பல திட்டங்களுக்காகவும் தமிழகத்தில் உள்ள 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்சார்பாக தங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்
அவையாவன:-
1. மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாளைய கனவான கடல் அலைகளில் கால் நனைக்க செய்யும் வகையில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு நடைப்பாதையை அமைத்துக்கொடுத்து சக்கர நாற்காலிகளிலேயே அவர்கள் செல்லும் வகையிலும் கடல் அலைகளின் ஊடே அவர்கள் செல்ல சிறப்பு சக்கர நாற்காலிகளையும் ஏற்படுத்தி தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.மேலும்
2. மாற்றுத்திறனாளிகளுக்கு, நகர்ப்புற அரசுப்பேருந்துகளில், இலவச பயணச்சலுகைகள் அளித்தமைக்காகவும்.
3. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணம் செய்து கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முழுகட்டண விலக்குச்சலுகை அளித்தமைக்காகவும்
4. தமிழக அரசின் அனைத்துத்துறைகளிலும் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களில், 4 சதவிகித இடஒதுக்கீடு முறையாகபின்பற்றப்பட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சிறப்புத்தேர்வு நடத்தி, மாற்றுத்திறனாளிகள் பணி அமர்த்தப்படுவர் எனஉத்தரவிட்டுள்ளாமைக்காகவும்,
5. அனைத்துத்துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்கு, ரூ.1702 கோடி மதிப்பீட்டில் உரிமை திட்டம் (Rights Project) செயல்படுத்தி வருவதற்காகவும்.
6. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கி வருவதற்காகவும்
7. தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தேர்தலில், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம் என்று சட்டமசோதாவை நிறைவேற்றியமைக்காகவும் தமிழ் நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை, தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தாங்கள் அறிவித்துள்ளதற்காகவும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆடிட்டர் TAP. வரதகுட்டி டாக்டர் ஆவின்.கி.கோபிநாத்
மாநில தலைவர் மாநில பொதுச்செயலாளர்
Cell: 9841048947 Cell: 9790820194
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சமர்பிக்கப்படும் கோரிக்கைகள்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தாங்கள் அமோக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து நல்லாட்சி வழங்கி வருவதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை, தங்களின் நேரடிகட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலனில் தாங்கள் கொண்டிருக்கும் மிகுந்த அக்கறையையும், மனிதநேயத்தையும் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த 3.12.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியத்தொகையை ரூபாய் 1000 த்திலிருந்து, 1500 ரூபாயாகஉயர்த்தி, வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வுசங்கம் சார்பில், மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாளைய கனவான கடல் அலைகளில் கால் நனைக்க செய்யும் வகையில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு நடைப்பாதையை அமைத்துக்கொடுத்து சக்கர நாற்காலிகளிலேயே அவர்கள் செல்லும் வகையிலும் கடல் அலைகளின் ஊடே அவர்கள் செல்ல சிறப்பு சக்கர நாற்காலிகளையும் ஏற்படுத்தி தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மேலும் தாங்கள் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவும் அறிவித்துச் செயல்படுத்தி கொண்டுவரும் நல்ல பல திட்டங்களுக்காகவும் தமிழகத்தில் உள்ள 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பாக தங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தாங்கள் அறிவித்துள்ளவதற்காகவும் எங்களது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
மாற்றுத்திறனாளர்களின் கீழ்க்கண்ட இம்முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கோரி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பணிவுடன் வேண்டுகிறோம்:-
1. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2016 பிரிவு 34ல் (Rights of Persons with Disabilities Act 2016), அரசுத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு, பதவி உயர்விலும் 4 சதவிகித இட ஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதனையே உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உடனடியாக இதனை அமல்படுத்திட உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, ஆந்திரா, பஞ்சாப், அரியானா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், பதவி உயர்விலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு,
பதவி உயர்விலும் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட , தமிழக அரசு ஆவண செய்து உடனடியாக அமல்படுத்திடவும், அரசாணை பிறப்பித்திடவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
2. எஸ்.சி. எஸ்.டி. பிரிவினரை, மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால், தமிழகஅரசால் வழங்கப்படும் பல்வேறுசலுகைகளைப் போன்று, மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத சாதாரணநபர்களுக்கும், அவர்களது வாரிசுதாரர்களுக்கும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பில் சலுகை போன்ற சலுகைகளை தமிழக அரசு வழங்கிட வேண்டுகிறோம்.
3. தமிழக அரசுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 30 வருடம் முழு பணி செய்து முடித்துள்ள பணியாளர் /ஊழியர்களுக்கே, முழுஓய்வூதியம் (full pension), மற்றும்பணிக்கொடை (gratuity) அரசால் வழங்கப்படுகிறது. தமிழக அரசுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்களின் உடல்குறைபாட்டினை கருத்தில்கொண்டு, 20 வருடம் முழுபணிசெய்து முடித்துள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்களுக்கு, முழுஓய்வூதியம், பணிக்கொடை போன்ற பணப் பயன்கள் வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பிக்கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
4. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி பயில, மாற்றுத்திறனாளிகளுக்காக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள 5 சதவிகித இட ஒதுக்கீடு இடங்களில் ஏற்படும் காலியிடங்களை, மற்ற பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருவது தற்போது நடைமுறையில் உள்ளது. இனிவரும் காலங்களில், அக்காலி இடங்களை மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு வழங்கிட, தமிழக அரசு ஆவண செய்து உதவிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
5. தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்றுவாரியத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், தடையற்ற சூழலுடன் கூடிய, பிரதியேக சிறப்புக் குடியிருப்புக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கென தமிழக அரசு கட்டித்தந்து, சலுகை விலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடுசெய்து, வழங்கிடவேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
6. ஆசிரியர் தகுதித்தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 மதிப்பெண்களும் (82/150), முதுநிலைபட்டதாரி ஆசிரியர்தகுதித்தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 75 மதிப்பெண்களும் (75/150), அனைத்துப்பிரிவினருக்கும், தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகையாக, அவ்விருதேர்விலும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 60 மதிப்பெண்கள் (60/150), அதாவது 40 விழுக்காடாக நிர்ணயம் செய்திட கேட்டுக்கொள்கிறோம்.
7. தமிழக சட்டப்பேரவையில், காலம் காலமாக ஆங்கிலோ இந்தியர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் நியமன உறுப்பினர் பதவியினை, ஆங்கிலோ இந்தியர்களே தற்போது இல்லாத காரணத்தினாலும், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்கவும், அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுத்திடவும், வாய்ப்பு வழங்கிடும் வகையில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு அந்நியமன உறுப்பினர் பதவியினை ஒதுக்கீடு செய்திட, ஆவண செய்திட வேண்டுமாய், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
8. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம் 2016 ல் சொல்லப்பட்டுள்ளவாறு, சட்டமன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில், மாற்றுத்திறனாளிகள் போட்டியிடும் வகையிலும், அவர்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிடவும், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடவும், தகுந்த சட்டத்திருத்தங்கள் கொண்டுவரவும் ஆவண செய்து உதவிட வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
9. தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு (CL), அரசு வழங்கிவருகிறது. மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்களின் நடைமுறைப்பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஆண்டிற்கு கூடுதலாக 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave), வழங்கிட வேண்டுமாய் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
10. மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டையில், விலாச மாற்றம் செய்ய, தற்போது நேரடியாக அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சென்று விண்ணப்பம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை எளிதாக்கிடும் வகையில், ஆன்லைன் மூலம் செய்திடும் வசதி, ஏற்படுத்தித்தர வேண்டுகிறோம்.
11. மாற்றுத்திறன் நபரின் பெயரில் உள்ளவீடு, கடை, காலிஇடம், மனைகளுக்கு சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளித்திட, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆவண செய்திட வேண்டுமாய் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
12. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நீதி மன்றங்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப்பட்டு, அவர்கள் சம்பந்தமான வழக்குகளை, விரைவில் முடித்திட ஆவண செய்திட வேண்டுகிறோம்.
13. கன மழை மற்றும் பேரிடர் காலங்களில், அனைத்து அரசுத்துறை மற்றும் அத்தியாவசியப்பணிகள் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை / பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
தங்கள் நம்பிக்கையுள்ள,
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம்
டி.ஏ.பி.வரதகுட்டி
மாநிலத்தலைவர்,
Cell:9841048947
டாக்டர் ஆவின் கி.கோபிநாத்
மாநில பொதுச்செயலாளர்,
Cell:9790820194.